கோவை அரசு மருத்துவமனையில் மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் - ஆட்சியர் துவக்கி வைத்தார்!

கோவையில் மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக இன்று முதல் 12ஆம் தேதி வரையும், செப்டம்பர் 13 முதல் 16 வரை 2ஆம் கட்டமாகவும், அக்டோபர் 9 முதல் 14 வரை 3ஆம் கட்டமாகவும் நடைபெற உள்ளது.




கோவை: கோவை அரசு மருத்துவமனையில், மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.

கோவை அரசு மருத்துவமனையில், மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.



இந்த முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார்.



இதில் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் அருணா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அரசு மருத்துவமனை டீன் நிர்மலா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த மருத்துவ முகாம் மூன்று கட்டங்களாக இன்று முதல் 12ஆம் தேதி வரையும் செப்டம்பர் 13ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரைக்கும் அக்டோபர் ஒன்பதாம் தேதியிலிருந்து 14 ஆம் தேதி வரையும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளையும் இதுவரை செலுத்த முடியாமல் தவறிய தடுப்பூசி தவணைகளை உடனே செலுத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா பேசியதாவது, கோவை மாவட்டத்தில் இம்முகாமிற்கு தேவையான தடுப்பு மருந்துகள் தடுப்பூசிகள் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் பொது சுகாதாரம் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் குறைகளைச் சார்ந்த களப்பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.

இந்த முகாமில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளாக நகர்ப்புறங்களில் உள்ள தற்காலிக குடிசை பகுதிகள் செங்கல் சூளை மலைப்புற கிராமங்கள் மற்றும் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள கிராமங்கள் உள்ளன.

மேலும், வெளிமாநிலத்திலிருந்து வேலை வாய்ப்பிற்காக கட்டிட வேலை மற்றும் தொழிற்சாலை பகுதிகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மேலாளர்கள் மூலம் தெரியப்படுத்தி அங்கன்வாடி மையங்கள் அல்லது துணை சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த முகம் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...