கோவையில் சாப்பிடுவதற்கு அழைத்துச் சென்று ஈரான் நாட்டு பெண்ணை கட்டாயப்படுத்தி மதுகுடிக்க வைத்து மிரட்டல் - 2 இளைஞர்கள் கைது

புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து ஈரான் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ராஜூ, ஜோன் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.



கோவை: ஈரான் நாட்டை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவர் பி.பார்ம் பிசியோதெரபி படித்து முடித்து விட்டு மும்பையில் தங்கி இருந்தார். அப்போது இவருக்கு கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் ஈரான் பெண்ணை கோவைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரான் பெண் கோவை வந்தார்.

பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் வேலை தேடி வந்தார். தோழி மூலமாக ஈரான் பெண்ணுக்கு புதுசித்தாபுதூரை சேர்ந்த ராஜூ (32) என்பவர் அறிமுகம் ஆனார். 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

நேற்று இரவு ராஜூ, ஈரான் பெண்ணை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு கிளப்பிற்கு சாப்பிடுவதற்காக அழைத்தார். இளம்பெண்ணும் அங்கு சென்றார். அங்கு ராஜூவுடன் அவரது நண்பர் குன்னூரை சேர்ந்த ஜோன் பிரான்சிஸ் (40) என்பரும் வந்து இருந்தார். அங்கு ராஜூவும், ஜோன் பிரான்சிசும் மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த 2 பேரும் ஈரான் பெண்ணை மது குடிக்க அழைத்தனர். ஆனால் அவர் மதுகுடிக்க மறுத்து விட்டார்.

இதனையடுத்து 2 பேரும் கட்டாயப்படுத்தி ஈரான் பெண்ணை மது குடிக்க வைத்தனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து ஈரான் பெண்ணிடம் போதையில் தவறாக நடக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த இளம்பெண் கிளப்பை விட்டு வெளியே வந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த 2 பேரும் நடுரோட்டில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசினர். இது குறித்து ஈரான் பெண் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து ஈரான் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ராஜூ, ஜோன் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....