வனத்தில் யானைகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட உள்ளது - அமைச்சர் மதிவேந்தன் தகவல்!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் 'தமிழ்நாடு யானைகள் மாநாடு 2023' நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், யானைகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரப்பட உள்ளது என்றார்.



கோவை: வனத்தில் யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் 'தமிழ்நாடு யானைகள் மாநாடு 2023' நேற்று தொடங்கியது.



இந்த துவக்க விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



மாநாட்டை துவக்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது,



முதல் முறையாக தமிழ்நாட்டில் யானைகளுக்கு கருத்தரங்கம் நடத்தி உள்ளோம். இதில், வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். யானையின் வாழ்விடம், வாழ்க்கை குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது. இது இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே இதுபோன்ற கருத்தரங்கம் எங்கும் நடக்கவில்லை. வனத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதில் குழு அமைத்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டில் யானை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளோம். அவுட்-காய் (நாட்டு வெடி) போன்ற விடயங்களை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் வனத்துறையில் ஈடுபடுத்தபட்டுள்ளது.

காடுகளை பாதுகாக்க நாம் பணிகளை முன்னெடுக்க வேண்டும். வன ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.தடாகம் பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...