பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையத்தை மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி திறந்து வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு புதிய நியாயவிலைக் கடைகள் மற்றும் ஒரு புதிய அங்கன்வாடி மையம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தெற்கு மண்டலம், வார்டு எண் 91-இல் உள்ள சுகுணாபுரம் மேற்கு கல்கி கார்டன் பகுதியில், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை, மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடை பொருட்களும் வழங்கப்பட்டன.



இதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம், வார்டு எண் 73-இல் உள்ள பொன்னையராஜபுரம் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மற்றொரு நியாயவிலைக் கடையும், வார்டு எண் 72-இல் உள்ள அருணாசலம் வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையமும் திறந்து வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.57 லட்சம் மதிப்பிலான இந்த மூன்று திட்டங்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன.



நிகழ்ச்சியில் துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன், மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை தமிழ்மறை, நகரமைப்புக் குழுத் தலைவர் சந்தோஷ், உதவி ஆணையர்கள் டட்சிணாமூர்த்தி (தெற்கு), நர்மதா (மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...