ஆடி வெள்ளியையொட்டி வடமதுரை விஷ்ணு துர்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

ஆடி கடைசி வெள்ளியையொட்டி வடமதுரை வி.எஸ்.கே.நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



கோவை: வடமதுரை அடுத்த வி.எஸ்.கே.நகர் பகுதியில் உள்ள விஷ்ணு துர்கை அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கோவை வடமதுரை வி.எஸ்.கே. நகர் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம். ஆலய வளாகத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விஷ்ணு துர்கை அம்மனுக்கு ஒவ்வொரு ஆடி வெள்ளி கிழமைகளில் வி.எஸ்.கே. நகர் சுற்றியுள்ள ஒவ்வொரு நகர் பகுதி மக்கள் சார்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக 4வது வெள்ளிக்கிழமையான இன்று கிளாசிக் ரெசிடென்சி பகுதி குடியிருப்போர் சார்பில் அருள்மிகு விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



இதில் விஷ்ணு துர்கை அம்மனுக்கு பூக்கள், வளையல்கள் மற்றும் எலுமிச்சை மாலைகளால் அலங்கரித்திருந்தனர்.



அம்மனுக்கு பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து கற்பூர ஆரத்தி காண்பித்தனர்.



தொடர்ந்து ஊஞ்சலில் அலங்கரித்திருந்த விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பெண்கள் குழுவினர் அம்மன் பாடல்களை பாடி அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.



இதில் கிளாசிக் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றனர்.



அவர்களுக்கு விபூதி பிரசாதங்களுடன், பொங்கல், அபிசேகம், வெஜிடபுள் பிரியாணி, தயிர் சாதம், கூல் உள்ளிட்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....