நடிகர் சத்தியராஜின் தாயார் மறைவு - அமைச்சர்கள் முத்துச்சாமி, இரகுபதி, சாமிநாதன் நேரில் அஞ்சலி

வயது மூப்பு காரணமாக காலமான நடிகர் சத்தியராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, சத்தியராஜிக்கு ஆறுதல் கூறினர்.


கோவை: நடிகர் சத்தியராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள் முத்துச்சாமி, இரகுபதி, சாமிநாதன் ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சத்தியராஜின் தாயார் நாதாம்பாள் (93) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில், இன்று, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக வீட்டுவசதி நகர்புற வளர்ச்சி, மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி, தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் சத்தியராஜின் தாயார் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, நடிகர் சத்தியராஜிற்கு ஆறுதல் கூறினர். பொதுமக்களின் அஞ்சலிக்குப்பிறகு நாதாம்பாள் உடல் அனைவரது அஞ்சலிக்கு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Newsletter

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...