நியாய விலைக்கடையை முற்றுகையிட்ட தி.மு.க எம்.எல்.ஏ. கைது


நியாய விலைக்கடைகளில் மலிவு விலைப்பொருட்கள் முறையாக வழங்க கோரி தி.மு.க  சிங்காநல்லூர் சட்டம்ன்ற தொகுதி எம்.எல்.ஏ. நா.கார்த்திக் இன்று கோவை மசக்காளி பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையை முற்றுகையிட்டார். அவருடன் 50க்கும் மேற்பட்ட தி.மு.க  உறுப்பினர்கள் கலந்து கொண்டு, நியாய விலைக்கடைகளில் முறையாக பொருட்களை வழங்க  கோரி கோஷமிட்டனர்.

 

தொடர்ந்து, எம்.எல்.ஏ. நா.கார்த்திக்  செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 

எங்கள் கட்சியின் செயற்தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அனைத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் தொகுதிக்குட்பட்ட நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி மக்களுக்கு முறையாக பொருட்களை வழங்காத நியாய விலைக்கடைகளை முற்றுகையிடும் போராட்ட்ம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சி மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் மக்களை சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 



தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க வினர் மற்றும் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...