தமிழ் தீவிரவாதிகள் மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி

மீனவர் பிரிட்ஜோ மீன் பிடிக்க சென்ற படகு யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், சீன ரோந்து படையும், தமிழ் தீவிரவாதிகளும் கூட பிரிட்ஜோவை சுட்டுக்கொலை செய்து இருக்கலாம் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது, 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளைக்குள் 4 மாநில முதல்வர்கள் பதவியேற்பார்கள் என தெரிவித்தார்.

ஆற்காடு நவாப் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு சிறுபான்மையினரையும் அனுசரித்து செல்ல வேண்டும் எனவும் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. மதமாற்றம் செய்யமாட்டோம் என வெளிப்படையாக ஆற்காடு நவாப் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை மதமோதல்கள் நடைபெறாமல் இருக்கும் என தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து ஓரிரு நாட்களில் பா.ஜ.க தலைமை முடிவு செய்யும் எனவும், இடதுசாரிகள் மோசடி பேர் வழிகள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருப்பதாகவும், காவிரி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை எதிர்த்து பா.ஜ.க ஏன் போராட வில்லை என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, கேரளாவில் ஆட்சியில் இருக்கும் செத்துப்போன கட்சியை எதிர்த்து போராட தேவையில்லை என்று தெரிவித்த அவர், ஊடகங்கள் நக்சல் தீவிரவாதிகளின் குரலாக இருக்க வேண்டாம் எனவும், எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளை சேர்ந்தவர்களிடம் பேட்டி எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தார். மேலும், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

2014-க்கு பின்னர் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பிரிட்ஜோ இறந்துள்ளார் எனவும், இது துரதஷ்டவசமானது எனவும் தெரிவித்த அவர், பாகிஸ்தான் வீரர்கள் உரிய பகுதியில் இந்திய வீரர்கள் மீது தாக்கிய போது இந்திய அரசு எப்படி நடவடிக்கை எடுத்ததோ அது போன்ற நடவடிக்கையினை நிச்சயம் எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது இலங்கை அரசு காரணமாக இல்லாமல் சீன ரோந்து படை கூட காரணமாக இருக்கலாம் எனவும், மத்திய அரசுக்கு எதிராக இருக்கும் தமிழ் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் எனவும் குற்றம்சாட்டினார்.

மீனவர் பிரிட்ஜோ வந்த படகு யாருக்கு சொந்தம் என கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசுக்கு எதிராக பணம் கொடுத்து மக்களை தூண்டும் கும்பலுடையது அந்த படகு எனவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிராக மக்களை தூண்டும் சீமான் இந்திய நாட்டை விட்டே வெளியேற வேண்டும் எனவும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...