சார்ஜாவிலிருந்து கோவைக்கு தங்க பிஸ்கெட்டுகள் கடத்தி வந்தவர் கைது


சார்ஜாவில் இருந்து கோவை வரும்  ஏர் அரேபியா விமானம் மூலம் தங்க பிஸ்கெட்டுகள் கடத்தப்படுவதாக கோவை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று காலை  கோவை வந்தடைந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒலிப்பெருக்கி ஒன்றின் அடிப்பக்கத்தில் வைத்து 1 கிலோ 406  கிராம் எடையுள்ள தங்க பிஸ்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. 

தொடர்ந்து, தங்க பிஸ்கெட்டுகளை கடத்தி வந்த கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த திவாகரன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட தங்க பிஸ்கெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ.41 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதேபோல், கடந்த 11ம் தேதி சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் 1கிலோ 166 கிராம் தங்க பிஸ்கெட்டுகள் கடத்தி வந்தவரை விமான நிலைய அதிகாரிகள் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...