கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன் 3 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Electrician, Fitter, MMV, Wireman, Welder உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் இலவசப் பயிற்சியுடன் மாதம் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படும்.


Coimbatore: கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வி ஆண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 3, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் Electrician, Fitter, MMV, Wireman (இரண்டு ஆண்டு பயிற்சி காலம்) மற்றும் Welder (ஓராண்டு பயிற்சி காலம்) ஆகிய தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.




இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்க்கை உதவி மையத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.




Wireman மற்றும் Welder தொழிற்பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும், Electrician, Fitter, MMV தொழிற்பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம். ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் விண்ணப்பதாரர்களுக்கு 14 வயது முதல் உச்ச வயது வரம்பு இல்லை.




பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படும். இதனுடன் வருகையின் அடிப்படையில் ரூ.750 கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.




விலையில்லா NIMI பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள் மற்றும் மிதிவண்டி வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் முன்னணி நிறுவனங்களில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு பெற்று வழங்கப்படும்.




மேலும், பயிற்சியாளர்களுக்கு இட வசதி பொறுத்து உணவு மற்றும் தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.


Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...