உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பூர் மண்டலம், கோவை மண்டல இணை இயக்குநர், உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை அலுவலகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பொதுபோட்டி- முன்னுரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ள இப்பதவிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம்வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப தகுதியாக இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக மலைப்பிரதேசத்தில் ஈப்பு வாகனம் ஓட்டிய அனுபவம் தேவை.

இப்பதவிக்கான வயது வரம்பு 1.7.2016 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 18, அதிகபட்சமாக 35, பழங்குடியினர் குறைந்தபட்சம் 18- அதிகபட்சமாக 35, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் குறைந்தபட்சம் 18- அதிகபட்சம் 32, பிற்படுத்தப்பட்டவர் 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். இது தவிர மேலும் பிறபிரிவனர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் கோவை மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பதவிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் வரும் 31.3.2017ம் தேதிக்குள் மண்டல இணை இயக்குநர், உள்ளாச்சி நிதித் தணிக்கை துறை, 4-வது தளம், மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிடம், டவுன்ஹால், கோவை- 641001 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...