விஷால் மீது குற்றம்சாட்டுவதை சேரன் நிறுத்திக்கொண்டு படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மிஷ்கின் சாடல்

விஷால் மீது குற்றம்சாட்டுவதை சேரன் நிறுத்திக்கொண்டு படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மிஷ்கின் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியான நம்ம அணி சார்பாக கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஷால், மிஷ்கின், ஞானவேல் ராஜா, பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், 10 ஆண்டுகளாக தயாரிப்பாளர்களின் நலனுக்காக குரல் கொடுத்து எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் இந்த அணி தற்போது போட்டியிட போவதாகவும், இது தொடர்பாக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தயாரிப்பாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு வெறும் தேர்தலுக்கான பிரச்சாரமாக மட்டும் இல்லாமல், சிதறிக்கிடக்கும் தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து, தயாரிப்பாளர்களுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கி, தயாரிப்பாளர்கள் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து விஷாலின் தேர்தல் பிரச்சாரம் குறித்து சேரனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த மிஷ்கின், மூத்த தயாரிப்பாளரான சேரன் ஏன் இவ்வாறு தனி மனிதனை தாக்குகிறார் என தெரியவில்லை எனவும், இது போன்று விஷால் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.

சேரன் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அதனை தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறி மிஷ்கின், திரையுலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே தேர்தலில் களமிறங்கி உள்ளதாகவும், சேரன் குற்றச்சாட்டுவதை நிறுத்தி விட்டு, படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் சங்கத்தில் விஷால் பொறுப்பேற்ற பின்னர், அவர்கள் அளித்த வாக்குறுதியில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறும் என தெரிவித்தார்.

இது போன்று தயாரிப்பளர் சங்க கோரிக்கைகளையும் நிறைவேற்றவே விஷாலை இத்தேர்தலில் ஆதரித்துள்ளதாகவும், ஒரு ஆண்டிற்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவியில் இருந்து ராஜினாமா செய்வோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் திரையரங்குகள் அமைக்க அரசு சார்பாக அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதன் காரணமாக வட மாநிலங்களிடம் ஒப்பிடுகையில் மிக குறைந்த அளவிலான திரையரங்குகளே தமிழகத்தில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தவர். இதானால் வீடியோ பைரசியில் ஏற்படும் இழப்பு போல, குறைந்த திரையரங்குகளாலும் வருவாயை இழக்க நேரிடுவதாக கூறினார்.

இதே போன்ற சிக்கல்களை தீர்க்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...