ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கோவையில் தமிழக முதலமைச்சர் பேட்டி

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை வேட்பாளராக அறிவித்து இருப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் தெரிவித்தார்.

சேலத்தில் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் இன்று விமானம் மூலம் சென்னை செல்கின்றார். அதற்காக கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பதால், 100 சதவிகித வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தெரிவித்தார்.

இந்த முடிவு கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தாதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அதிருப்தி என யாருமே சொல்லவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...