கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோக நேரத்தினை குறைத்து ஆறு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டு பகுதிகளிலும் தற்பொழுது 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தினை குறைத்து 6 நாட்களுக்கு ஒருமுறையும் மற்றும் அதேபோல குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் தற்பொழுது 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தினை குறைத்து 6 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு குடிநீர் விநியோகப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் குறிச்சி (ஆழியார்) நீரேற்றுமிடத்தில் உள்ள பழுதடைந்துள்ள குடிநீரின் அளவு மானிக்கு பதிலாக வேறு குடிநீர் அளவு மானியை குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 64 பணிகளில் 24 பணிகள் முடிவடைந்துள்ளன.

நடைபெற்றுவரும் 40 பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்குமாறு நகரப்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியும், வணிகவளாகங்கள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடிநீர் இணைப்புகளைக் கண்டறிந்து உடனடியாக துண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறும், லங்கா கார்னர், காளீஸ்வரா மில், கிக்கானி பிரிட்ஜ், வடகோவை மற்றும் அவினாசி மேம்பாலம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வாரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மண்டல அளவில் தாழ்வான இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் தூர்வாரும் பணியினை மேற்கொண்டு மழைகாலங்களில் மழைநீர் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும், புதிய பாதாளசாக்கடை இணைப்பு கொடுப்பதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கவும், பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வைப்புத்தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகரப் பொறியாளர் (பொ) பார்வதி, செயற்பொறியாளர்கள் ஞானவேல், சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோகப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...