கோவை சூலூர் அருகே இரண்டு தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை - சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ்

கோவை சூலூர் அருகே இரண்டு தொழிலாளர்கள் உயிரிழக்க காரணமான கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு சென்று விடுவேன் என அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த சூலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக கட்சியை சேர்ந்த கனகராஜ் இருந்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சூலூர் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியில் ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த கல்குவாரியில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கனகராஜ் நேற்று மாலை ஆய்வு செய்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கனகராஜ், கல்குவாரியில் அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு முறையாக ஆய்வு நடத்தவில்லை என குற்றம்சாட்டினார். இந்த கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழக்க வேண்டியிருக்கும் என கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள நான் வேறு அணிக்கு சென்றுவிடுவேன் அல்லது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் எனவும் தெரிவித்தார். 

மேலும் இருவர் உயிரிழக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனில் எதற்கு எனக்கு பதவி என கேள்வி எழுப்பிய அவர், வேறு அணிக்கு சென்றலாலும் சென்றுவிடுவேன் எனவும், எதை பற்றியும் எனக்கு கவலையில்லை எனவும் கனகராஜ் தெரிவித்தார். ஏற்கனவே 135 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 12 பேர் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிட்ட நிலையில், மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பகிரங்கமாக வேறு அணிக்கு சென்றுவிடுவேன் என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...