இஸ்லாத்தில் பிறந்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுபவர்களின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்- அனைத்து ஜமா-அத்களின் கூட்டமைப்பு

கோவையில் கடந்த 16 ம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த பாருக் என்பவர் கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் அன்சர்த் என்பவர் சரணடைந்த நிலையில், படுகொலைக்கு அனைத்து ஜமா-அத் கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 



பாரூக்-ன் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று கோவை அனைத்து ஜமா-அத் கூட்டமைப்பினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளர் உமர் கூறியதாவது :- 

இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாகும். இது யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது. கடவுளை மறுப்பதும், வணங்குவதும் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம். அவ்வாறு வாழ்ந்த ஒருவரை கும்பல் ஒன்று கொலை செய்ததை இஸ்லாம் எந்த விதத்திலும் ஏற்காது. இந்த படுகொலையை அனைத்து ஜமா-அத்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 

சில  தனிப்பட்ட நபர்கள் செய்த தவறுக்கு ஒரு சமூகத்தை விமர்சனம் செய்வது எந்த வகையிலும் தீர்வாகாது.

கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள அன்சார்த் எந்த ஜமாத்-திலும் இருப்பதாக தெரியவில்லை. படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு எங்கள் கூட்டமைப்பின் சார்பில் உதவிகளை செய்வோம். 

இளைஞர்கள் சிலர் தீய வழியில் செல்வதை தடுக்க அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க எங்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இஸ்லத்தில் பிறந்து கடவுள் மறுப்பு கொள்கை பேசுவது அவரின் தனிப்பட்ட கருத்து. அவ்வாறு கடவுள் மறுப்பு கொள்கை பேசுபவர்களின் பாதுகாப்பை காவல்துறை தான் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...