கோவையில் தேங்கிய மழைநீர் - உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

வடக்கு கிழக்கு பருவ மழை தீவிரமான நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மழைநீர் வடிகால் வடிகால் நிரம்பி குப்பைகளோடு தண்ணீர் வடிந்தோடிய நிலையில் மேயர் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களைமேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.13க்குட்பட்ட மாணிக்கவாசகர் நகரில் மாண்புமிகு மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு வீடுகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட சங்கனூர் கால்வாய் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரி, அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட கல்பனா லே-அவுட் பகுதியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, இரவு பெய்த மழையில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார்நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...