கோவையில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - 11 பேர் வீட்டில் சிகிச்சை

ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது 11 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மேலும் இருவருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்து 176 ஆக உள்ளது. இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 545 போ் குணமடைந்துள்ளனர். தற்போது 11 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனா்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...