குண்டடத்தில் 300 பேர் பங்கேற்ற மங்கை வள்ளி கும்மியாட்ட கலை நிகழ்ச்சி - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஒரே இடத்தில் 300 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய மங்கை வள்ளி கும்மியாட்டம் ஆடி விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடிம், நடனம் ஆடியும் அசத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மங்கை வள்ளி கும்மி கலை குழுவினர் சார்பில் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி ருத்ராவதி பேருந்து நிலைய அருகே உள்ள மைதானத்தில் மங்கை வள்ளி கும்மி 110,வது கும்மியாட்ட அரங்கேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ஒரே இடத்தில் 300 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய மங்கை வள்ளி கும்மியாட்டம் ஆடி விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடி அசத்தினர்.



இதைக் காண தாராபுரம், குண்டடம், சூரியநல்லூர் மேட்டுக்கடை தாயம்பாளையம், சங்கரன்டாபாளையம், வரப்பாளையம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர்.

நிகழ்ச்சிக்கு உலக சாதனை படைத்த ஆசிரியர் வெள்ளநத்தம் பி.சண்முகசுந்தரம் ஆசிரியர் தலைமை வகித்தார். மங்கை வள்ளி கும்மியாட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கையில் கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது.

கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது. வைகாசியில் கொண்டாடப்படும் கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர்.

நாட்டுப் புறப்பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்பி பற்றிய குறிப்புகள் உள்ளன. திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது.

அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் , திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...