மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம் நீட்டிப்பு - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சிறப்பு ரயிலின் இயக்கம், டிச., 27ம் தேதியுடன் முடிவுற்ற நிலையில், தற்போது, ஜன., 29 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயிலில் ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில், வரும் ஜனவரி இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு ரயில், ஞாயிறு இரவு, 7:00 மணிக்கு திருநெல்வேலியில் (06030) இருந்து புறப்பட்டு மறுநாள் காலை, 7:30 மணிக்கு, மேட்டுப்பாளையம் வந்தடையும். அதேபோல், திங்கள் இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் (06029) இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இச்சிறப்பு ரயிலின் இயக்கம், டிச., 27ம் தேதியுடன் முடிவுற்ற நிலையில், தற்போது, ஜன., 29 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயிலில் ஏ.சி., இரண்டடுக்கு, மூன்றடுக்கு, படுக்கை வசதி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

சிறப்பு ரயில் சேரன்மாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், திருவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார், கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...