அசோகபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சீரமைத்த கோவை ரோட்டரி கிளப்

கோவை மாவட்டம், அசோகபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் நூலக கட்டிடம் சீரற்றநிலையில் காணப்பட்டு வந்தது.



இந்நிலையில், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அப்பள்ளியை தத்தெடுத்து பள்ளி அறைகள் முழுவதும் வண்ணம்பூசி, புதிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவிகள் பயன்படுத்த அப்பள்ளியில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட நூலகத்தினை சீரமைத்து அங்கு கண்களை கவரும் வகையில் புதிய வண்ணப்பூச்சுகள் செய்யப்பட்டுள்ளது.



மேலும், மாணவிகளின் வசதிக்காக ரோட்டரி கிளப்பின் சார்பில் வகுப்பறை மற்றும் நூலகத்தில் புதிய மின்விளக்குகள் மற்றும் காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ளது.



இதன் துவக்கவிழாவில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூரின் தலைவர் குர்ப்ரீத் சிங் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...