கேசிடி கல்லூரி நிறுவனரின் 94-வது பிறந்தநாள் விழாவில் மகாலிங்கம் செஸ் அகாடமியை துவக்கிவைத்த கிரான்ட் மாஸ்டர் விஷ்வநாதன் ஆனந்த்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் அருட்செல்வர் என்.மகாலிங்கம் 94-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மார்ச் 20 மற்றும் 21 ஆகிய இருநாட்கள் அக்கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின்போது என்.மகாலிங்களம் அவர்களின் அவரது பார்வையிலான அதிகாரம், சமூக உணர்வுள்ள மனித நேய உணர்வு உள்ளிட்டவை குறித்து பகிரப்பட்டது.



மார்ச் 20 முதல் நாள் நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி ஊக்கத்தொகை மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மார்ச் 21, செவ்வாயன்று குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் நாளை முன்னிட்டு இணைத் தலைவர் ஸ்ரீ ஷங்கர் வானவராயர் வரவேற்புறை ஆற்றினார்.



பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்புரை ஆற்றினார். ஸ்ரீ மானுவல் ஆரோன் அவர்களை உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் வி.சுந்தர் பொன்னாடை போற்றி வரவேற்றார். துணை தலைவர் எம்.மாணிக்கம், நிருபர் ஸ்ரீ. எம்.பாலசுப்ரமணியம் மற்றும் அக்கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினார்கள்.



நா.மஹாலிங்கம் சாதனையாளர் விருது இவ்வருடம் மானுவேல் ஆரோனுக்கு செஸ் விளையாட்டை இந்தியாவில் வளர்ச்சி பெற அரும்பாடு பட்டமைக்கு வழங்கப்பட்டது. ஆரோன் நா.மஹாலிங்கம் அவர்களுடன் இருந்த நட்பை பற்றியும், பின் அவர் செஸ் மீது கொண்ட ஈடுபாடும், அக்கறையும் பற்றி அவரது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நா.மஹாலிங்கம் செஸ் அகாடமி பள்ளி மாணவர்கள், செஸ் வீரர்கள் மற்றும் செஸ் ஆர்வலர்களுக்கு, செஸ் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் என ஊக்குவிக்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. 

செஸ் ஆர்வலரான அருட்செல்வரின் நினைவாக இந்த அகாடமி துவங்கப்பட்டுள்ளது. நா.மஹாலிங்கம் செஸ் அகாடமியை முன்னால் உலக சாம்பியனான ஜி.எம்.விஸ்வநாதன் ஆனந்த் திறந்து வைத்தார்



இதனைத்தொடர்ந்து, விஸ்வநாதன் ஆனந்த பேசுகையில், அருட்ச்செல்வரால் தான் தமிழ்நாடு செஸ் அகாடமி உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். மேலும் கொங்கு மண்டலத்தில் இந்த அகாடமி தலை சிறந்த அகாடெமியாக உருவெடுக்கும் மற்றும் இந்த அகாடெமியிலிருந்து பல சாம்பியன்கள் உதயமாவார்கள் என்று புகழுரைத்தார்.

மேலும், இந்நிகழ்சியில் ஜோதி நிலையம் மற்றும் விருத்தினர் மாளிகை திறப்பு விழா, தேவாரப் பண்ணிசைப் போட்டி, லய சமர்ப்பணம் போன்ற கலை நிகழ்சிகளும் நடைபெற்றன.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...