துலுக்கனூர் பகுதியில் சாலை போட்டதில் ஒப்பந்ததாரர் முறைகேடு - மக்கள் சாலை மறியல்

மண் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றி தர வேண்டும் என துலுக்கனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட துலுக்கனூர் 13-வது வார்டில் சிமெண்ட் சாலை அமைத்ததில் விநாயகர் கோவிலுக்கு மேற்குபுறம் உள்ள நடு வீதிக்கு 40-மீட்டர் அளவு போடாமல் விட்டு, துலுக்கனூரில் உள்ள கோவில் பகுதிக்கு வரவேண்டிய சாலையை கிழபுறம் உள்ள தனி நபர் பட்டா இடத்திற்கு 4.0 மீட்டர் சாலை போட்டு தனியார் நில உரிமையாளரிடம் பணம் பெற்று ஒப்பந்ததாரர்கள் முறைகேடாக பஞ்சாயத்து பணத்தை செலவு செய்து சாலை அமைத்துள்ளனர்.



இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் 100-குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது பண்டில் பணமில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.



விநாயகர் கோவிலுக்கு மேற்குபுறம் உள்ள நடு வீதியிலிருந்து உள்ள 40 மீட்டர் கோவிலுக்கு பொதுமக்கள் சாமி கும்பிட்டுச் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.



எனவே துலுக்கனூர் நடு வீதியிலிருந்து கோவிலுக்கு கிழக்கே செல்லும் மெயின் பாதையில் 40 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலை அமைத்து கோவிலுக்கு பொதுமக்கள் சென்று வழிபாடு செய்யவும், பொதுமக்கள் அவசர தேவைக்கும் தினசரி தேவைக்கும் பயன்பட்டு வரும் மண் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் துலுக்கனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...