பூமியை சுத்தமாக வைக்கக் கோரி கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு

கல்லூரி மாணவர்கள் பூமியை தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர். மேலும் ரயில் நிலையத்தில் வரிசையாக நின்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: நிலத்தில் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களை குப்பைகளாக போடுவதால் நிலம் மாசடைந்து ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதனால் பூமியை பாதுகாக்கவும், பசுமையாக வைத்துக் கொள்ளவும் பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள் முன்வந்து பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தனியார் கல்லூரி சார்பில் பூமியை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பசுமையாக வைத்துக் கொள்ளவும் வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் பூமியை தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.



மேலும் ரயில் நிலையத்தில் வரிசையாக நின்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதில் சில மாணவர்கள் முகத்தில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு வாசகங்களை எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...