கோவையில் மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஜனவரி 21 ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெறவிற்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டில் கோவை மாநகர் மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர் அணி தம்பிமார்கள் வெண் சீருடையுடன் பங்கேற்பது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: கோவை, வடகோவை, கிராஸ்கட்சாலை, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற, கோவை‌ மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ExMLA., அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.



பின்னர், கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் இரண்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்:1

மாண்புமிகு தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், கழகத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம், மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில், ஜனவரி 21 ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெறவிற்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டில் கோவை மாநகர் மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர் அணி தம்பிமார்கள் வெண் சீருடையுடன் பங்கேற்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 2

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான, உழைக்கும் உழவர் பெருமக்கள் இயற்கைக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் ஜாதி, மதபேதங்களை களைந்து, எல்லோரும் ஓர் இனமாய் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளை, கோவை மாநகர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிக் கழகங்கள், வார்டுகளிலும் கழகத்தின் இருவண்ண கொடி ஏற்றிவைத்தும், "சமத்துவப் பொங்கல்" வைத்தும், தமிழர்களின் பாரம்பரியமான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தியும், திருவள்ளுவர் பெருந்தகை அவர்களுக்கு மலர்மாலை அணிவித்தும், மகளிர்கள் பங்கேற்க கூடிய கோலப்போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தி, கோலாகலமாக பொங்கல் விழாவை கொண்டாடுவதென்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இக்கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், தலைமை கழக நிர்வாகிகள், தீர்மானக்குழு இணைச்செயலாளர் பி.நாச்சிமுத்து, கழக சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே.எம்.தண்டபாணி, பி.ஆர்.அருள்மொழி, தீர்மானக்குழு உறுப்பினர் மு.ரா.செல்வராஜ், மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் தமிழ் செல்வன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வே.பாலசுப்ரமணியம், ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.ம.ச.முருகன், புதூர்மணிகண்டன், சசிக்குமார், சா.கர்த்திகேயன், பகுதிச் செயலாளர்கள் ஆர்.எம்.சேதுராமன், கணபதி‌லோகு, அஞ்சுகம் பழனியப்பன், வ.ம.சண்முகசுந்தரம், பரணி கே.பாக்கியராஜ், கே.எம்.ரவி, ப.பசுபதி, மார்க்கெட் எம்.மனோகரன், வி.ஐ.பதுருதீன், சிங்கை மு.சிவா, துரை.செந்தமிழ்செல்வன், மா.நாகராஜ், இரா.சேரலாதன், அணிகளின் அமைப்பாளர்கள் இ.ரா.தனபால், அக்ரிபாலு, பூரணச்சந்திரன், அன்புச்செழியன், சி.ஆர்.கனிமொழி, அன்னம்மாள் Ex.Mc., ஸ்ரீ சத்யா, கோவை தங்கம், சிவப்பிரகாஷ், கண்ணன், டெம்போ சிவா, ஏ.எஸ்.ஜெயகுமார், எஸ்.கண்ணன், வி.எம்.மணி, உமாகாந்தன், கோவை அபு, கே.ஆர்.ராஜா, இலா.தேவசீலன், கராத்தே அர்ச்சுனன், அணிகளின் தலைவர்கள் சிவராமன், சாந்தாமணி பன்னீர்செல்வம், ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...