ஆனைக்கட்டி பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களுடன் பொங்கல் விழா

பொங்கல் விழாவிற்கு ஆதிவாசி மக்களுடன் இணைந்து வந்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள், 21 அரிமா சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் உள்பட அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடி அசத்தினர்.


கோவை: கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள மலை கிராமங்களில் என்.எம்.சி.டி. அறக்கட்டளை மற்றும் அரிமா சங்கங்கள் சார்பில் பழங்குடிகளான ஆதிவாசி மக்களுடன் 14ம் ஆண்டாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



விழாவில் ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியும், ஆதிவாசி மக்களுடன் இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பொங்கல் வைத்து பாரம்பரிய நடனமாடி பொங்கல் கொண்டாடினர்.

கோவை நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையானது ஏழை, எளிய மற்றும் மலைவாழ் மக்களுக்காக கடந்த 35 ஆண்டுகளாக சமூக மேம்பாட்டுப்பணியை செய்து வருகிறது. அதன் தொடர்சியாக வருடந்தோறும் கோவை ஆனைகட்டி கோபனாரிப் பகுதியில் உள்ள அனைத்து பழங்குடி கிராமங்களையும் அழைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இந்த வருடம் ஆனைகட்டி அருகிலுள்ள கோபனாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள நபார்ட் கிராமசந்தை வளாகத்தில் 14வது ஆண்டாக பொங்கல் விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.



முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை ஆதிவாசி மக்கள் தங்களது முறைப்படி பூக்கள் மற்றும் மூங்கில் குச்சி கொடுத்து வரவேற்றனர்.



தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டு பொங்கும்போது, பொங்கலோ பொங்கல் என சிறப்பு விருந்தினர்களும், ஆதிவாசி மக்களுக்கு கோசங்களை எழுப்பினர்.

இந்த விழாவிற்கு நிர்வாக அறங்காவலர் ஏ.எஸ்.சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். அரிமா சங்க ஆளுநர் ராம்குமார் முன்னிலை வகித்து பேசினார். இவ்விழாவில் தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை, கோவை மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.



அதன்பின்னர் ஆதிவாசி மக்களுடன் இணைந்து வந்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள், 21 அரிமா சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள் உள்பட அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடி அசத்தினர்.



அதன்பின்னர் 46 ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 மலைவாழ் மக்களின் குடும்பங்களுக்கு புத்தாடைகள், லேப்டாப், பரிசல், மலைவாழ் மக்களின் வாத்தியங்கள் என நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன.



இதில் 21 அரிமா சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள், சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆதிவாசி மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவின் இறுதியில் கரிகாலன் நன்றி கூறினார். மேலும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை செய்திருந்தது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...