பொங்கலுக்கு கோவையிலிருந்து பிற ஊர்களுக்கு செல்ல 700க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கம்

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொங்கல் பண்டிகை வரும் திங்கள் (15.1.2024) அன்று கொண்டாடப்படவுள்ளதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை கோட்டம் சார்பாக கோவையில் இருந்து பிற பகுதிகளுக்கு மக்கள் செல்ல 700க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க பேருந்து நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளை இயக்கப்படும். காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆணைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சாலை - ஊட்டி, கூடலூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த பேருந்துகள் அனைத்தும் 12.1.2024 முதல் 14.1.2024 வரை தற்காலிகமான அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தப் பேருந்து நிலையங்களை அடைய காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...