கோவையில் 2வது முறையாக ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி

பெண்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டும், பெண்களுக்கு வயிற்று பகுதி, கர்ப்பப்பை பகுதியில் வருகின்ற புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இரவுநேர மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.


கோவை: ஜெம் அறக்கட்டளை சார்பில் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி தமிழகத்தில் இரண்டாம் முறையாக பெண்களுக்கென இரவு நேர மாரத்தான் போட்டி நடத்துகிறது.

பெண்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டும், பெண்களுக்கு வயிற்று பகுதி, கர்ப்பப்பை பகுதியில் வருகின்ற புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.



இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஜெம் மருத்துவமனை அரங்கில் வெளியிட்டார். இந்த T-Shirt வெளியீட்டு நிகழ்வில் ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர்.பழனிவேல், டாக்டர். பிரவீன் ராஜ், தலைமை செயல் அதிகாரி பிரபா பிரவீன்ராஜ், இணை நிர்வாக இயக்குனர் உட்பட ஜெம் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் போட்டி குறித்து பேட்டியளித்த, ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர்.பழனிவேலு அவர்கள், ஜெம் அறக்கட்டளை, கோவை மாநகர காவல் மற்றும் தமிழ்நாடு அத்லட்டிக் அசோசியேஷன் அங்கீகாரத்தின் மூலம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி பெண்களுக்கான மாரத்தான் போட்டி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

இது வ.உ.சி மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறினார். மேலும் இது தமிழகத்தில் இரண்டாம் முறையாக இரவு நேரத்தில் நடைபெறுகின்ற மாரத்தான் போட்டி எனவும் தெரிவித்தார். 5000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3,5,10 கிமீ தூரம் மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளதாகவும், பெண்களின் ஆரோக்கியத்தை மையமாக கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்துவதாகவும் குறிப்பாக பெண்களுக்கு வயிற்றுப்பகுதி, கர்ப்பப்பை பகுதியில் ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் அன்றைய தினம் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கான சத்துள்ள உணவுகள், யோகா பயிற்சிகள் ஆகியவை எடுத்துக் கூறப்பட்ட உள்ளதாகவும், கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பாக www.coimbatorewomensmarathon.com என்ற தளத்தில்பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...