மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்கு, மீண்டும் முக்கிய பதவியான கட்சித் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.


கோவை: அதிமுகவில் கட்சியின் முன்னாள் அமைச்சரும் கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவருமான S.P. வேலுமணிக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

அதிமுகவில் பல்வேறு நிர்வாக மாற்றங்களை அறிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் அமைச்சர்கள் S.P. வேலுமணி மற்றும் நத்தம் R. விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, கட்சியை மீறி தவெகாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் S.P. வேலுமணி, C.V. சண்முகம் உள்ளிட்டோர் அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தனர். கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான S.P. வேலுமணி அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், தற்போது S.P. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அதிமுகவில் புதிய அரசியல் சமநிலைக்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கட்சியின் அமைப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் செயல்பட்டு வந்த தலைவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது, வரவிருக்கும் அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனங்கள்பார்க்கப்படுகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...