கோவையில் நில அளவை செய்ய லஞ்சம் கேட்ட நில அளவையர் கைது


கோவை மாவட்டம் சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவர் தனது நிலத்திற்கு பட்டாகேட்டு அப்பகுதி நில அளவையரான சுப்ரமணியிடம் கேட்டுள்ளார். அப்போது, கந்தசாமியின் நிலத்தை அளவை செய்ய சுப்ரமணி ரூ.14 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கந்தசாமி, கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார். 

இது குறித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டை லஞ்ச ஒழிபு போலீசார்  கந்தசாமியிடம் கொடுத்தனர். அந்த நோட்டுகளை நில அளவையரான  சுப்ரமணியனிடம் இன்று கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் சுப்ரமணியனை கையும் களவுமாக கைது செய்தனர்.

தொடர்ந்து, போலீசார் சுப்ரமணியனை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.                        

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...