கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில மாணவ எழுச்சி மாநாடு

தேசிய மாணவ இயக்கமான கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில மாணவ எழுச்சி மாநாடு கோவையில் நடைபெற்றது. மாநாட்டின் துவக்கமாக மாணவர்களின் எழுச்சி பேரணி கோவை கோட்டைமேடு வின்செட் ரோட்டில் துவங்கியது.

 

இதனை சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில்  சி.எப்.ஐ மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம், புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வுக்கு எதிராகவும், பெண்களின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இறுதியாக பேரணி மாநாடு நடைபெறும் நல்லாயன் சமூகக்கூடத்தில் நிறைவு பெற்றது.



பின்னர், கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எஸ்.முஸ்தபா தலைமையில் மாநில மாணவ எழுச்சி மாநாடு துவங்கியது. சி.எப்.ஐ மாவட்ட தலைவர் கே.பீர் முகமது வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், சி.எப்.ஐ தேசிய தலைவர் பி.வி சுஹைப் தேசிய தலைவர் பி.வி சுஹைப், எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், எழுத்தாளர் மதிமாறன், சி.எப்.ஐ தேசிய குழு உறுப்பினர் நூரா மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டின் இறுதியாக மாநில பொதுச் செயலாளர் அப்துர்ரஹ்மான் நன்றியுரை கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...