கோவை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும் ஐயப்ப சாமி கோவிலில் வருகின்ற 12-ம் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது, 2000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும் ஐயப்ப சாமி கோவிலில் வருகின்ற 12-ம் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவாக இன்று மாலை கொடி ஏற்றம் நிகழ்ச்சி ஆலயத்தின் தந்தை பிரம்மஸ்ரீ பாலக்காட்டில்லத்து சிவப்பிரசாத் நம்பூதிரி தலைமையில் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் எட்டு காலம் பூஜைகள் நடைபெற உள்ளது.



12-ம் தேதி அன்று சுவாமி ஐயப்பன் திருவுருவ உற்சவ சிலையை மூன்று யானைகளுடன் மேல் அமர்த்தி செண்டை மேளம் முழங்க பஞ்சவாத்தியம் உடன் சித்தாபுதூர், சத்தி ரோடு, கிராஸ் கட் ரோடு, 100 அடி ரோடு வழியாக ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இறுதி நாளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் 2000 க்கு மேற்பட்டோருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...