கோவையில் உள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா

மேலான குறிக்கோளுடன் சிறந்த முயற்சியும் மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும் என்று கல்லூரி விழாவில் தமிழக முன்னாள் காவல் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு பேசியுள்ளார்.


கோவை: கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியில் பதினேழாவது கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் கல்லூரி வளாகத்தில் 04.04.2024 அன்று காலை நடைபெற்றது.



விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழக முன்னாள் காவல் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு கலந்துகொண்டு பல்வேறு இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது பேசிய அவர், மேலான குறிக்கோளுடன் சிறந்த முயற்சியும் மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும் என்று அறிவுரை வழங்கினர். விழாவிற்கு தலைமை வகித்த கல்லூரியின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் அவர்கள் பேசும்போது நல்ல கல்வி பெற்று வாழ்வில் சிறந்த மனிதர்களாக மாணவர்கள் உருவாக இக்கல்லூரி எப்போதும் துணை நிற்கும் என்று மாணவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார்.

முன்னதாகக் கல்லூரியின் முதல்வர் முனைவர். சீ.ராஜு வரவேற்புரையும், அதனைத் தொடர்ந்து ஆண்டறிக்கையும் வாசித்தார். தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற மூன்றாமாண்டு மாணவர்களுக்கு சுமார் 596 பணியாணைகள் முனைவர். சி. சைலேந்திர பாபு அவர்களால் வழங்கப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சுமார் 1400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். உங்களைப்போல் உங்கள் பெற்றோர்களோ, முந்தைய தலைமுறையினரோ படித்திருக்கமாட்டார்கள். ஆனால் உங்களின் கல்விக்காக அவர்களின் தியாகம் மிகப் பெரியது. உங்கள் எதிர்கால வாழ்க்கை சுலபமானது அல்ல. அந்தச் சவால்களைச் சமாளிக்க இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களின் துணையோடு ஆயத்தமாகவேண்டும் என அறிவுறுத்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...