சமூக வலைதளங்களில் மக்களை சந்திப்பவர் அண்ணாமலை – கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் மக்களை நம்பி நிற்பதாகவும், திமுகவினர் பணத்தை நம்பி நிற்பதாகவும், அண்ணாமலை செய்தியாளர்களிடமும், சமூக வலை தளங்களிலும் தான் அரசியல் செய்வதாகவும் களத்தில் இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சாடியுள்ளார்.


கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸை கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் K.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் நேற்று (ஏப்ரல்.16) சந்தித்து ஆதரவு கோரினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடுநாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டோம் என தெரிவித்தார். கோவை தொகுதியில் ராமச்சந்திரனுடைய வெற்றி பிரகாசமாக இருப்பதாக கூறினார். திமுக மூன்றாண்டு கால ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. மத்தியில ஆளுகின்ற பாஜகவும், அதன் மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலையும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தாலும் இதுவரை எதுவும் செய்யாததால் திமுக கொடுத்த வாக்குறுதி போல் தான் அண்ணாமலை கொடுத்த வாக்குறுதியும் என்றார்.



நாங்கள் மக்களை நம்பி நிற்பதாகவும், திமுகவினர் பணத்தை நம்பி நிற்பதாகவும் தெரிவித்தார். அண்ணாமலை செய்தியாளர்களிடமும் சமூக வலை தளங்களிலும் தான் அரசியல் செய்வதாகவும் களத்தில் இல்லை என கூறினார். அண்ணாமலை தற்பொழுது அதிமுகவை ஒழிப்போம், எடப்பாடியாரை ஒழிப்போம் என்று தான் பேசி வருவதாகவும் 50 ஆண்டுகாலம் இல்லாத வளர்ச்சியை தாங்கள் தான் அளித்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் திமுக 38 எம்பிக்களை கொண்டும் எதுவுமே செய்யவில்லை எனவும், தாங்கள் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி தமிழ்நாட்டு உரிமையை மீட்டெடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார். இது மட்டுமின்றி இலங்கை தமிழர் பிரச்சினை, இட ஒதுக்கீடு அனைத்தையும் மீட்டெடுத்தது அதிமுக தான் என தெரிவித்தார். மற்றவர்கள் கூறுவதில் உண்மையில்லை எனவும், தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக எதிர்ப்பலைகள் கடுமையாக இருக்கிறது எனவும், திமுக வேட்பாளர்கள் களத்திற்கு கூட செல்ல முடிவதில்லை என தெரிவித்தார். மேலும் எடப்பாடியாரின் பேச்சு உண்மை தன்மை நாட்டு மக்களுக்குநாங்கள் செய்ததும் திமுக செய்யாதது என மக்கள் எடப்பாடியாரை முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் எனவும் முழுமையான வெற்றி அதிமுகவிற்கு தான் என தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள் மோடியின் பக்கம் செல்கிறார்கள், அதிமுக தலைவர்கள் ஏசி அறையில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்திருந்தது குறித்து கருத்து கேட்டதற்கு பதில் அளித்த எஸ்பி வேலுமணி, ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு செல்வது அண்ணாமலை தான் எனவும், மீடியாவிலும், ட்விட்டரிலும், பேஸ்புக்களில் மட்டும் சந்தித்து கொண்டிருப்பது யார் என தெரியும் என பதிலளித்தார். மேலும் களத்தில் கீழ் மட்ட மக்களிடம், சாதாரண மக்களிடமும், ஏழை மக்களிடமும் அண்ணா திமுகவின் திட்டங்கள் இருக்கின்றது எனவும் புரட்சித்தலைவி (ஜெயலலிதா) மறைந்தால் கூட முழுமையாக நாங்கள் மட்டும் தான் இருக்கின்றோம் என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...