பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,701 வாக்கு சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

வாக்கு பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல், மை, பேனா, பென்சில், சீல் அரக்கு உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள், முதியவர்கள் வாக்கு அளிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் என ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் தேவையான அனைத்தும் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.


கோவை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.



தொடர்ச்சியாக கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நாளை பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு 6 சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 1,701 வாக்கு சாவடிகளில் நடைபெற உள்ள நிலையில் இன்று வாக்கு பெட்டி இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தீவிர பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல், மை, பேனா, பென்சில், சீல் அரக்கு உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் மாற்று திறனாளிகள், முதியவர்கள் வாக்கு அளிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் என ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் தேவையான அனைத்தும் உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...