தாராபுரம் அருகே கார்கள் மோதல் 7 பேர் படுகாயம்

தாராபுரத்தில், ஒரு ஹூண்டாய் காரும் ஈகோ வேனும் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர். அலங்கியம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே காரும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்த சம்பவம் நடந்தது.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியிலிருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள காட்டம்பட்டி பிரிவில் ஒரு ஹூண்டாய் காரும், பழனி கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய பக்தர்கள் நிறைந்த ஈகோ வேனும் கொடுமையான மோதலில் சிக்கின.



இந்த விபத்தில் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள் சிவா, சூர்யா, மெய்யரசன், ராஜா, கார்த்தி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் சந்தோஷ் உட்பட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



விபத்து குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...