கற்பகம் மருந்தியல் கல்லூரியின் சார்பில் கோடை வெயிலின் பாதிப்புகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு

கோடை வெப்பத்தின் பாதிப்பை எவ்வாறு தடுப்பது மற்றும் என்ன வகையான உணவுகளை கோடைகாலத்தில் எடுத்து கொள்வது பற்றி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.


கோவை: கோவை, ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியின் சார்பில் கோடை வெயிலின் பாதிப்புகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றிய விழிப்புணர்வு, அரிசிபாளையம் கிராமத்தில் 2.5.24 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

மேலும் கோடைகாலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசிப்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் கணேசன் தலைமைதாங்கினார். ஊர்பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குவதை கல்லூரியின் முதல்வர் மோகன் தொடங்கிவைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஐந்தாம் ஆண்டு பயிலும் பார்ம். டி மாணவர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் மருந்தியல் பயிற்சித்துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.

கோடை வெப்பத்தின் கடும் பாதிப்பை எவ்வாறு தடுப்பது மற்றும் என்ன வகையான உணவுகளை கோடைகாலத்தில் எடுத்து கொள்வது பற்றி ஊர்பொதுமக்களுக்கு மாணவர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து விளக்கமளித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...