சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது உறுதி – கோவையில் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி

எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் சவுக்கு சங்கருக்கு கையில் 2 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்பு மன அழுத்ததில் இருந்து வெளியே வந்துள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்குசிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கையில் 2 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். சிகிச்சைக்கு பின்புமன அழுத்ததில் இருந்து வெளியே வந்துள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்ததாகவும் வழக்கறிஞர் கூறினார்.



இந்நிலையில் சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகி உள்ளது என்றார். மாநகர சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுப்பதாக மனு அளித்த இருந்த நிலையில் அதை பின் வாங்கியுள்ளனர். திங்கட்கிழமை கட்டு மாற்ற மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கரை அழைத்து வர வேண்டும் என வழக்கறிஞர் கூறினார். அதே போன்று கஷ்டடி மனுவும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என்றனர்.

5 வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம்ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் சவுக்கு சங்கருக்கு போராடி இந்த சிகிச்சை பெறப்பட்டுள்ளது என்றார்.தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்த பிறகு தான், கஞ்சா வைத்திருந்தாக வழக்கு பதியப்பட்டுள்ளது கூறிய அவர், மிகவும் மெனக்கிட்டு கஞ்சா வழக்கு போலீசார் போட்டுள்ளனர் எனவும், ஆனால் கஞ்சா வழக்கு பொய் வழக்குஎன நிருப்பிக்க முடியும் என சவுக்கு சங்கர் கூறியதாகவும் அதற்கான ஆதாரங்களை அவர் வைத்துள்ளதாகவும் வழக்கறிஞர்கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...