பொள்ளாச்சி அருகே தாத்தூர் பகுதியில் கஞ்சா கடத்தி வந்த தந்தையும் மகனும் கைது - இருசக்கர வாகனம் பறிமுதல்

பீஹார் மாநிலத்தில் இருந்து 8 கிலோ 400கிராம் கஞ்சா மற்றும் 3 கிலோ 100கிராம் போதை சாக்லேட்டை ஆகியவற்றை வாங்கிவந்து கேரளா மாநிலம் கஞ்சிகோடு பகுதிக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


கோவை: பொள்ளாச்சி அடுத்த தாத்தூர் பகுதியில் நேற்று நள்ளிரவு ஆனைமலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு உரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தியதில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் கஞ்சா மற்றும் போதை சாக்லேட் இருப்பது தெரியவந்தது.



இருவரையும் கைது செய்த ஆனைமலை போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பீஹார் மாநிலத்தில் இருந்து 8 கிலோ 400கிராம் கஞ்சா மற்றும் 3 கிலோ 100கிராம் போதை சாக்லேட்டை உள்ளிட்டவை கேரளா மாநிலம் கஞ்சிகோடு பகுதிக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட தந்தை முகம்மது சஹாப்தின் மற்றும் அவரது மகன் ஆரிப் ராஜா ஆகிய இருவர் மீதும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை ஆனைமலை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். முகம்மது சஹாப்தின் மீது கோவை கா.கா., சாவடி காவல்நிலையதில் 2007ஆம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...