கோவையின் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை

அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 692 கடைகளில் இருந்து 3098.38 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி, கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கோவை மாவட்ட காவல் துறை மற்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து 23 சிறப்பு குழுக்கள் தமிழக அரசால் அமைக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதிகளில் இன்று மே.11 சோதனை மேற்கொண்டனர்.

அதன்படி பீளமேடு, கணபதி, போத்தனூர், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர்', காளப்பட்டி, அவிநாசி ரோடு, காந்திபுரம், வடவள்ளி, ரேஸ் கோர்ஸ், ராமநாதபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர், அன்னூர், எஸ்.எஸ்குளம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, ஆனைமலை, வால்பாறை போன்ற பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சிறப்பு கூட்டு கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி 5,568 கடைகளில் திடீர் கூட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது 692 கடைகளில் சுமார் 3098.38 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளான பான்மசாலா மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்காவின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய் 30,63,804 ஆகும்.

மேலும் களஆய்வின் முடிவில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருள் பான்மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்த முதல் முறை குற்றம்புரிந்த 683 கடைகளுக்கு அபராதமாக தலா ரூபாய்25,000 வீதம் மற்றும் அவர்களது கடையில் வணிகம் மேற்கொள்ள 15 நாட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூபாய். 17,07,5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் முறை குற்றம் புரிந்த 8 கடைகளுக்கு கடைகளுக்கு அபராதமாக ரூ.50,000/- வீதம் மொத்தம் ரூபாய்.4,00,0000/- அபராதம் விதிக்கப்பட்டு மற்றும் அவர்களது கடையில் வணிகம் மேற்கொள்ள 30 நாட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வணிகம் மேற்கொள்வது கண்டறிய நேரிட்டால் 94440-42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...