கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தான் என் கைகளை உடைத்தார். கோவை சிறையில் தான் உனக்கு சமாதி என்று மிரட்டுவதாக சிகிச்சை முடிந்து கோவை அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் கூச்சலிப்பட்டி கூறினார்.


கோவை: யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தேனியில் வைத்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். காவல்துறையினரையும், பெண் காவலர்களையும் தரக்குறைவாக பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் சிறையில் தாக்கப்பட்டதாகவும், கையில் காயம் ஏற்பட்டதாகவும் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

அவர் கூறியது போலவே கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கருக்கு கையில் மாவு கட்டு போடப்பட்டது. இந்நிலையில் மறு சிகிச்சைக்காக மீண்டும் கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு அந்த பழைய மாவு கட்டு அவிழ்க்கப்பட்டு புதிதாக மாவு கட்டு போடப்பட்டது.



அதனைத் தொடர்ந்து வெளியில் அழைத்து வரப்படும் பொழுது சவுக்கு சங்கர், சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தான் என் கைகளை உடைத்ததாகவும், கோவை சிறையில் தான் உனக்கு சமாதி" என்று மிரட்டுவதாகவும், சவுக்கு சங்கர் குற்றச்சாட்டை வைத்தபடியே வெளியில் வந்தார்.

அதனை தொடர்ந்து மீண்டும் அவரை போலீசார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர். காவல்துறையினர் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவானது இன்று (மே.13) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...