கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழா - கொட்டும் மழையில் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், கிரேன் மூலம் தொங்கியபடி அழகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் காமாட்சி அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: கோவை ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவிலில் 97வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகு குத்துதல், பூசட்டி எடுக்கும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. இதில் சுமார் 1,000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பூச்சட்டி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செய்தனர்.



அதேபோல் கிரேன் மூலம் தொங்கியபடி அழகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் வந்து காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் ஆலாந்துறை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



மேலும் ஜமாப், கேரளா செண்டை மேளம், கேரளா தையம் ஆட்டம் என திருவிழா கலைகட்டியது. இறுதி நாளான இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...