நொய்யல் ஆற்றில் கலந்த சாயப்பட்டறை கழிவுகள் - நடவடிக்கை எடுக்க கோவை மக்கள் கோரிக்கை

பட்டணம் அணைக்கட்டு, சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் நொய்யல் ஆற்றில் கழிவுகளை திறந்துவிடும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் வழியாக காவிரியாற்றில் கலக்கிறது. இந்த ஆறு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்நிலையில் ஆறு வருகின்ற வழித்தடமான சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளால் அடிக்கடி இந்த ஆற்றில் மாசு ஏற்படுகிறது.



இந்த நிலையில் கோவையில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருவதால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் சாயப்பட்டறை கழிவுகள், ஆற்றின் மீது நுரை படலாமா படர்ந்தது.

குறிப்பாக பட்டணம் அணைக்கட்டு, சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு பகுதிகளில் சாயப்பட்டறை கழிவுகள் நுரைப்படலமாக படர்ந்து காணப்படுகிறது. அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்வதாகவும் இதனை தடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகமும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் இன்று மே.16 கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...