பாப்பநாயக்கன்பாளையத்தில் இரவு நேரத்தில் தோட்டத்தில் புகுந்து உணவு தேடிய ஒற்றை காட்டு யானை – சிசிடிவி வெளியீடு

வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய ஒற்றை காட்டுயானை, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள குணசேகரன் என்பவரது தோட்டத்தில் புகுந்து உணவு ஏதாவது இருக்கிறதா? என்ற தேடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, குணசேகரன் என்பவரது தோட்டத்தில் புகுந்து அவரது வீட்டை சுற்றிச் சுற்றி உணவு தேடியது. மேலும் அங்கு நிறுத்தியிருந்த டிராக்டரிலும் உணவு தேடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாக ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது உணவு தேடி மலை அடிவாரப் பகுதிகளாக மாங்கரை, வீரபாண்டி, தடாகம், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது.



இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் துடியலூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை உணவு தேடி அங்கிருந்த குணசேகரன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது. காட்டு யானையை பார்த்ததும் அங்கிருந்த நாய்கள் குரைக்கத் தொடங்கின. அப்போது அந்த யானை வீட்டைச் சுற்றி சுற்றி உணவு தேடியது. அங்கு இருந்த அரிசி மூட்டையை தூக்கி வீசி அதைத் திண்று சேதப்படுத்தியுள்ளது. மேலும் அங்கு நிறுத்தியிருந்த டிராக்டரிலும் ஏதாவது உணவு இருக்குமா என தேடியது.

உணவு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து சென்று விட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது காட்டு யானை இருப்பதை கண்டு வீட்டினுள்ளேயே இருந்துவிட்டனர். இது அங்கு பொருத்தியிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. உயிர்சேதம் ஏற்படும் முன் காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...