வால்பாறையில் கனமழை - 16 வது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

அட்டகட்டியில் பெய்த கனத்த மழையால், 16 வது கொண்டை ஊசி வளைவில் திடீரென பாறைகள் உருண்டு நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று மதியம் கனத்த மழை பெய்தது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அட்டகட்டியில் பெய்த கனத்த மழையால் அப்பகுதியிலுள்ள 16 வது கொண்டை ஊசி வளைவில் திடீரென பாறைகள் உருண்டு நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தன.



இதனால் அவ்வழியாக சென்ற பேருந்து மற்றும் வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவலறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறையினர், துரிதமாக செயல்பட்டு பாறைகளை உடைத்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக தடைபட்ட போக்குவரத்து சீரானது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...