உடுமலை அருகே சிலந்தை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்

சிறு சிறு ஆறுகளை வழிமறித்து தடுப்பணைகள் கட்டுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் தடுப்பணையால் பாதிப்பு இல்லை என்று கூறுவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் பிரதான நீர்வரத்தான சிலந்தை ஆற்றின் குறுக்காக தடுப்பணை கட்டப்பட்டு வருவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள், சிலந்தை ஆற்றின் குறுக்காக தடுப்பணை கட்டப்பட்டு வருவதை கண்டிக்கின்றோம். இதை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம். ஏனென்றால் அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், 120 க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறு சிறு ஆறுகளை வழிமறித்து தடுப்பணைகள் கட்டுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் ஒரு டி.எம்.சி தண்ணீர் தான் எடுக்கப்படுகிறது. இதனால் பாதிப்பு இல்லை என்று கூறுகிறார்கள். பழைய மற்றும் புதிய ஆயகட்டுப்பகுதி விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் அறிக்கை அளித்து உள்ளனர். அதிகாரிகளின் பதிலானது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற நிகழ்வாகும். தடுப்பணை கட்டும் பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது கேரள மாநில சோதனை சாவடிகளில் தடுக்கின்றனர்.



சட்டவிரோதமாக அணை கட்டுவதால் தான் ஆய்வு செய்ய மறுக்கின்றனர். வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் முறையாக அனுமதி பெறாததும் தெரியவருகிறது. தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கும் அங்குள்ள மரங்களை காப்பாற்றவும் தடுப்பணை கட்டி வருகின்றனர். இதனை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் .

மேலும் தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அணை கட்டுவதை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படுவதுடன் தமிழகத்தில் இருந்து உடுமலை வழியாக கேரளாவுக்கு செல்லும் காய்கறிகள், இறைச்சி, போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...