40 தொகுதிகளிலும் திமுக வெல்லும் – கோவையில் அமைச்சர் டிஆர்பி.ராஜா பேட்டி

மகத்தான வெற்றியை நாளை நாற்பது தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும். கோவைக்கு தேர்தல் வாக்குறுதி அளித்தது போல, மிகப் பெரிய வளர்ச்சி, சிறு குறு தொழில்களில் பெரிய விடியல் அடுத்த கட்டமாக காத்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும் என்று அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex mla தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் டிஆர்பி.ராஜா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும். கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஒட்டுமொத்த தமிழகமும் கலைஞரை கொண்டாடி வருகிறது. கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அவருக்கு அஞ்சலி செலுத்தினோம்.



தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் கலைஞர்தான். ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் வெற்றியை மட்டுமே கண்ட தலைவர் கலைஞர். இன்றைய நாளில் அவரை கொண்டாடி வருகிறோம். முதலமைச்சர் தமிழகத்திற்கு மூன்றே ஆண்டுகளில் மகத்தான சாதனைகள், மகத்தான நலத்திட்டங்களை பொது மக்களுக்கு, தாய்மார்களுக்கு, இளைஞர்களுக்கு அற்புதமான நலத்திட்டங்களை கொடுத்து வருகிறார்.

மகத்தான வெற்றியை நாளை நாற்பது தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும். இதனை மக்கள் கொடுப்பார்கள். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் மகத்தான வளர்ச்சியை அனைத்து துறைகளிலும் முதலமைச்சர் செய்து காட்டுவார். பல மடங்கு திட்டம் அற்புதமான செய்து காட்டுவார். கோவைக்கு தேர்தல் வாக்குறுதி செய்தது போல, மிகப் பெரிய வளர்ச்சி, சிறு குறு தொழில்களில் பெரிய விடியல் அடுத்த கட்டமாக காத்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும் என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், பொருளாளர் எஸ்எம்.முருகன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி மற்றும் வார்டு செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...