திமுக அரசின் சாதனைக்கு கிடைத்த வெற்றி - பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பெருமிதம்

பொள்ளாச்சி தொகுதியில் திமுக வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஈஸ்வரசாமி தொடர்ந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பொள்ளாச்சி தொகுதியில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த ஈஸ்வரசாமி மற்றும் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.



பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது உள்ளிட்ட கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், இலவச பேருந்து பயண திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாலும் முதல்வரின் முத்தான திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் ஈஸ்வரசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...