இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் பெங்களூரில் உள்ள இல்லத்தில் மறைவு

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங், பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலையில் இயற்கை எய்தினார்.


கோவை: இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முனைவர் ஜான்சிங் இந்திய காடுகள் அனைத்தையும் அறிந்தவர். அவற்றில் பெரும்பாலானவற்றை நடந்தே கடந்தவர். உடல் நலம் குன்றுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு கூட வட இந்தியக் காடுகளில் ஆய்வுக்காகப் பல கிலோமீட்டர் நடந்த அனுபவத்தை பதிவு செய்துள்ளார். இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் முதன்மையராக (Dean, Wildlife Institute of India) பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

அவரால் பயிற்றுவிக்கப்பட்ட இந்திய வனப்பணி அலுவலர்கள் (IFS officers) நாடு முழுவதும் பணியாற்றுகிறார்கள். இந்தியக் காடுகள் பற்றியும், காட்டுயிர்கள் பற்றியும் அவர் எழுதியுள்ள நூல்கள் அரிய ஆவணங்கள். அவரது ஆழமான படிப்பறிவும், இடைவிடாத கள ஆய்வும் இந்தியக் காட்டுயிர் மேலாண்மைக்குப் பெரும்பங்காற்றியுள்ளது.

பலர் முரண்பாடு கொள்வார்கள் என்றாலும், எத்தகைய சபையிலும் தமது கருத்துக்களைத் தயக்கமின்றி எடுத்துரைப்பார். அவரது மரணம் காட்டுயிர்களின் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் பேரிழப்பு. நாடு ஒரு பேரறிஞரை இழந்துள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...