தென்னாட்டு மக்களை கருப்பர்கள் என்ற பாஜக தருண் விஜயை கண்டித்து கோவையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்னாட்டு மக்களை கருப்பர்கள் என்று பேசிய பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜயை கண்டித்து திராவிடர் கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா? என சர்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் பாஜக எம்.பி.யான தருண் விஜயின் சர்சைக்குறிய இப்பேச்சைக் கண்டித்து இன்று திராவிடர் கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தருண் விஜயின் கருத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வெளிப்பாடு என்றும், இது இன எதிர்ப்பு விதமான பேச்சு என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், வட நாட்டு மக்களால் தென்னாட்டு மக்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

கோவை தேற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவட கழகத்தைச் சேர்ந்த 40-கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...